இந்த இணப்பை தொடும் போது அடுத்து செல்வதற்கான தகவலை வழங்கும்
When you point to a link, this pane will give help tips on where you will be carried out by that link


வரலாறு


இரண்டாயிரத்து ஜநூறு ஆண்டுகளுக்கு அதிகமான வரலாற்றை கொண்டுள்ள மகாபராக்கிரமபாகு அரசனுடைய காலத்துக்கு பிறகு நெற்பயிர் செய்கையில் இலங்கை தன்னிறைவு அடைந்து உள்ளதாக ஊர்ஜிதப் படுத்தப்பட்டுள்ளது.

கி.மு. 900-600 இடைப்பட்ட காலத்தினுள் வடிவமைக்கபட்ட மட்பாத்திரங்களில் நெற் செய்கை பற்றிய ஓவியங்கள் காணப்படுவதற்கான ஆதாரங்கள் உள்ளன.

இதனால் கி.மு. 600ற்கு முன்பும் இலங்கையில் நெற்செய்கை காணப்பட்டிருக்கலாமென சந்தேகிக்க முடியும். கி.மு.6வது நூற்றாண்டில் விஜயனும் அவனது சகாக்களும் இலங்கைக்கு வந்து வர்கள் உணவாக சோற்றை உண்டதுடன் மீதியை குவேனிக்கும் கொடுத்துள்ளனர்.

எழுதப்பட்ட வரலாறுகளில்; முதல் தடவையாக பண்டுவஸ்தேவ அரசனின் ஆட்சி காலத்திலேயே நெற்செய்கை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

கி.மு.4ம் நூற்றாண்டில் பண்டுகாபய மன்னனினால் அனுராதபுரத்தில் அபய வாவி மைக்கப்பட்டதுடன் இது ரஜரட்டயின் நெற்செய்கையில் மாபெரும் பங்கினை வகித்துள்ளதாக வரலாற்று ல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

தேவநம்பியதிஸ்ஸ அரசனது காலப்பகுதியில் மிஹிந்து எனும் பௌத்த போதகர் இலங்கைக்கு வந்து பௌத்த மதத்தை இங்கு நிலை நாட்டியதன் பின்பு இலங்கை அரிசியினால் தன்னிறைவு பெறும் றிகுறி தென்பட்டது.

ஆனாலும் மீண்டும் ஏற்பட்ட ஆக்கிரமிப்பாளர்க ளினதும், இயற்கை அனர்த்தங்களினதும் காரணத்தால் நெற் செய்கை படிப்படியாக நலிவடையும் தன்மைக்கு மாறியது.

கி.மு. 161ன் பின் ஆரம்பமான துட்டகைமுனு அரசனது ஆட்சி காலத்தில் நெற்செய்கை மீள பழைய நிலமைக்கு திரும்பியது. பல்வேறு யுத்த நிலைமைகள் காரணமாக அழிவுக்கு உள்ளான ற்சைய்கை மீள மகா பராக்கிரமபாகு அரசனின் ஆட்சி காலத்தினுள் முன்னேற்றமடைந்தது.

சூல வம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு பெரிய குளங்கள் 63ம், சிறிய குளங்கள் 2376ம், ஆறுகள் 3910ம்,165 வாவிகளும் இக்கால கட்டத்தினுள் அமைக்கப்பட்டுள்ளன.

"புவியில் விழும் ஒரு மழை துளியேனும் பாவனைக்கு உட்படுத்தப்படாது கடலிற்கு அனுப்ப கூடாது" என பராக்கிரமபாகு கூறி இருக்கிறார். இதிலிருந்து பராக்கிரம யுகத்தில் நெற்செய்கைக்கு காண்பிக்கப் பட்ட கரிசனையை விளங்கிக்கொள்ள முடிகிறது.

முதல் தடவையாக அரிசியை இக்காலப் பகுதியில்ஏற்றுமதி செய்ததாக வரலாற்றில் குறிப்பிடப் ட்டுள்ளது. கி.பி. 1505 இல் ஒல்லாந்தர் மற்றும் போர்த்துக்கள் கடற்கரையை அண்டிய ரதேசங்களை கைப்பற்றியதன் பின்னர் கடற்கரையை அண்டிய பிரதேசங்களில் நெற்செய்கை தடைப்பட்டது.

1660-1679 காலப்பகுதியினுள் மலைநாட்டு ஐஐ வது இராஜசிங்க மன்னனது கைதியாக வாழ்ந்த ரொபர்ட் நொக்ஸின் காலப்பகுதியான 1680 இல் இலங்கையில் சேற்று நிலத்திற்காக மாவீ 7மாதங்கள்), ஹாதியல் (6மாதங்கள்), ஹொன்டரவாலு(5மாதங்கள்), ஹீனட்டி (4மாதங்கள்) ,அல்பத்கல்(3மாதங்கள்) போன்ற நெல் வர்க்கங்கள் காணப்பட்டதுடன் சேனை பயிர் செய்கைக்காக கொடவீ எனும் வர்க்கமும் காணப்பட்டன.